Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் – திருச்சி உட்பட 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம்

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு அலுவலகம் திருச்சி சார்பில் வெளியிடப்பட்ட வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதனை வருகிற 17-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இம்முகாமில் தொழில்நுட்ப பிரிவு சிப்பாய், விமான போக்குவரத்து தொழில்நுட்ப பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டன்ட் கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பித்தவர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி தங்களது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் சென்று டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த டோக்கன் இருந்தால் மட்டும் தான் நாகர்கோவில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் 0431-2412254 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *