Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தலைகள் சிதறும் என எஸ்பிக்கு மிரட்டல் விட்டவர் கைது

கடந்த (11.07.2024)-ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர்.நகர் துரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைலமரகாட்டில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் துரை (எ) துரைசாமி மற்றும் அவருடன் இருந்தவரை போலீசார் பிடிக்க சென்றபோது துரைசாமி போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர் நகர் துரை இறந்துள்ளார்.

இந்நிலையில், இறந்துபோன எம்.ஜி.ஆர் நகர் துரைசாமியின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், “mgr-nagar- official” முகவரியில் இருந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் “திருச்சியில் சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, மேற்படி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது குறித்து தீவர விசாரணை மேற்கொண்டதில், ராஜபாண்டி (21), த/பெ. ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.நகர், புத்தூர், திருச்சி என்பவர் தான் பதிவேற்றம் செய்துள்ளார் என தெரியவந்தது. எனவே, மேற்படி ராஜபாண்டியினை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தபோது, (29.07.2024)-ம் தேதி குழுமணி உறையூர் சாலையில் உள்ள ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் ராஜபாண்டியை பிடிக்க சென்றபோது, ராஜபாண்டி பட்டாகத்தியை காட்டி மிரட்டியதால், அவர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற . 193/2024, 5/1 196(b), 351(3) BNS r/w 27(1) Arms Act கைது செய்யப்பட்டு 12.08.2024-ம் திே வரை நீதிமன்ற காவல் பெறப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *