Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தீபாவளி விருந்தாக   திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள்

திரைப்பட செய்திகளைக் கேள்விப்படுவதும், சுவரொட்டி விளம்பரங்களை காண்பதுமே வாழ்வின் பெருமகிழ்ச்சியாக இருந்த காலங்கள் ஒழிந்து விட்டன. கைக்குள்ளேயே இருக்கும் கைப்பேசிக்குள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையெல்லாம் நினைத்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனும் வசதியை அறிவியல் அமைத்துத் தந்திருக்கிறது. OTT தளங்கள் காலத்தின் கட்டாயமாக மாறிப்போனாலும், சில படங்கள் தரும் அனுபவத்தை திரையரங்குகளில் மட்டுமே பெற முடியும். அந்த அனுபவத்தை அடைய விரும்பும் மக்கள் தொடர்ந்து திரைப்படங்களை திரையரங்கில் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். திரையரங்குகளில் குறிப்பாக பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.

நம் நாட்டில் 11,000 திரைகள் கொண்ட அரங்குகள் உள்ளன. உலகிலேயே திரைப்படம் பார்க்க மிகக் குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான் எனும் செய்தியையும் அறிய முடிகிறது. கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளோடு  திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை தினங்களை திரையரங்குகளில் கொண்டாட குடும்பத்தோடு செலவிட பலரும் திட்டமிட்டு வருகின்றனர். திருச்சி நகரில் திரையரங்களுக்கு என்று பெரும் வரலாறு இருக்கின்றது. திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி பரிசாக பல திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது திருச்சி LA சினிமா, சோனா மீனா, ரம்பா, காவேரி, மெகா ஸ்டார் போன்ற திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. தீபாவளி ரேஸில் யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் LA சினிமா மாரிஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் சோனா மீனாதிரையரங்கிலும்  ,
சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன்,அருண் விஜய் நடிப்பில் வா டீல் ஆகியவை வெளியாகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *