திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்வு மையம் வைத்திருப்பதாக அவர்களுக்கு பழைய துணிகள் மற்றும் பழைய புத்தகங்கள் தங்களால் முடிந்த உதவிகள் செய்யுமாறு கூறி, பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவரின் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடையில் அவர் வெளியே சென்று இருந்த போது அவரது மகன் சிறுவன் இருந்துள்ளார் .
அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கடைக்குல் சென்று அந்த சிறுவனிடம் விளம்பர நோட்டீசை கொடுப்பது போல் கொடுத்து கல்லாவில் இருந்த பணத்தை நூதன முறையில் ரூபாய் 3000 திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் செந்தில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்
Comments