திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல்நிலையத்தில் ஆர். இளங்கோவன் என்பவர் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர் காவல்நிலையத்துக்கு வரும் புகார்களைப் பெற்றுக் கொண்டு, பொதுமக்களிடம் புகாரை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் லஞ்சம் வாங்குவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகார்கள் சென்றன.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் மனுதாரர் ஒருவரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ திங்கள்கிழமை வெளியானது. இதைக் கேட்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், போலீசார் அனைவரும் தகவல் பரிமாறும் மைக்கில் பேசி, உதவி ஆய்வாளர் இளங்கோவனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments