Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒன்றரை வயதில் மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் வைத்தியநாதன் – தாரணி. இந்த தம்பதியினருக்கு ப்ரீதிகா என்ற ஒன்றறை வயதில் பெண் குழந்தை உள்ளது. ப்ரிதிகா ஒன்னேகால் வயதில்தனது அசாத்திய திறமையால் பொருட்களின் பெயரைச் சொன்னவுடன் அதனை படத்தில் உடனடியாக அடையாளம் காட்டும் திறன் கொண்டிருந்தார்.

இதனை அறிந்த பெற்றோர்கள் வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட் நடத்திய உலக சாதனை போட்டியில் தனது குழந்தையை பங்கேற்க வைத்தனர். இதில் ப்ரிதிகா 11.56 நிமிடத்தில் 190 படங்களை அடையாளம் காட்டினார். இதனால் அதி வேகத்தில் அடையாளம் காட்டக் கூடிய திறன் கொண்ட குழந்தையாக வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் சாதனை குழந்தையாக பதிவு செய்யப்பட்டு அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒரு வயதும் நான்கு மாதமும் நிரம்பிய குழந்தை ப்ரிதிகா வைத்தியநாதன் அடுத்த சாதனையாக 40வினாடிகளில் 50மீட்டர் ஓட்டத்தை கடந்தார். இந்த சாதனையால் வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் ப்ரீதிகா 2வது முறையாக இடம் பிடித்தார். அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.

இதேபோல் நம்பர்ஸ், வண்ணங்கள், உடல் உறுப்புகள், உறவுமுறைகள் ஆகியவற்றை கூறும் திறன் கொண்ட குழந்தை ப்ரீதிகா “சூப்பர் டேலண்ட்டட் கிட்ஸ்” என்று இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் என்ற உலக சாதன புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுவரை மூன்று உலக சாதனை புத்தகத்தில் தனது அசாத்திய திறமையால் பெயரை பதிவு செய்து சாதனைப்படுத்துள்ளார். ஒன்றரை வயது குழந்தை ப்ரிதிகா. இவரின் சாதனை குறித்து அவரது பெற்றோர் பெருமைப்படுவதாக தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *