திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றுபவர் விக்கி என்ற விக்னேஷ் (30). இவர் ஒய்பி போலீஸாக பணியில் சேர்ந்தவர். சமயபுரம் காவல்நிலையத்தில் ரைட்டராக கடந்த ஒரு வருடமாக பணியாற்றினார். ரைட்டராக பணியாற்றிய போது சமயபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் போலீசாருடன் வீண் வண்புகளில் ஈடுபட்டதால் ரைட்டர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது சமயபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.
ரைட்டராக பணியாற்றிய காலத்தில் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துக் கொண்ட இவர். தனிப்பிரிவு காவலராக பணியாற்றியதும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தடைசெய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, மணல் திருட்டு, சீட்டாட்டம், அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வோர் என அனைவரிடம் கூட்டு சேர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு நேச கரம் நீட்டி கறார் வசூல் மழையில் ஈடுபட்டு வருவதோடு தனி ராஜ்யமாக செயல்படுகிறார்.
காவல்நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதில் தப்பில்லை, ஆனால் காவல்நிலையத்திலேயே அந்த பெண் போலீஸ் இந்த தனிப்பிரிவு காவலருக்கு மதிய நேரத்தில் உணவு ஊட்டி விடுவது தொடர் வாடிக்கையாக உள்ளது.
சம்பவம் 2 : மீசை ராஜா என்பவர் சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த போது 120 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனை செய்த பணம் ரூ. 11,300 யை பொதுமக்கள் பிடித்து சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் வாசு விடம் ஒப்படைத்தனர்.
உதவிஆய்வாளர் வாசு தனது இருசக்கர வாகனத்தில் மீசை ராஜாவை ஏற்றி வந்த போது, காவல் நிலையத்திற்கு அழைத்து வரக் கூடாது அப்படியே விட்டு விடுங்கள் என ஒரு உயரதிகாரி போல எஸ்ஐ யை மிரட்டி நடவடிக்கை எடுக்க விடாமலும், சம்பவங்களை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமலும் மீசைராஜா வை காப்பாற்றியவர் தனிப்பிரிவு காவலர் விக்னேஷ்.
சம்பவம் 3 : இவரது உச்சகட்ட அராஜகம் என்னென்னா இம் மாதம் ஜூலை 3 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை மதியம் ) அரசுப் பேருந்தில் லால்குடிக்கு பயணம் செய்துள்ளார் விக்னேஷ். அப்போது கீழவாளாடி புதுரோடு பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து மோதியதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீ என்ற கொத்தனார் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அப்போது தனிப்பிரிவு காவலர் விக்னேஷ்க்கும், அப்பகுதி தலித் இளைஞர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சமயபுரம் தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் மகன் முருகானந்தம் என்ற 28 வயதான தலித் இளைஞரை லால்குடி காவல்நிலையத்திக்கு அழைத்துச் சென்று காவல்நிலையத்திலேயே கடுமையாக தாக்கி உள்ளார் சமயபுரம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் விக்னேஷ்.
மறுநாள் ஜூலை 4 ம் தேதி மீண்டும் தலித் இளைஞர் முருகானந்தம் மற்றும் அவருடன் இருந்த மேலும் இரண்டு தலித் இளைஞர் என மூன்று பேரை லால்குடி காவல்நிலையம் அழைத்து வந்து மூவரையும் மீண்டும் போலீஸôர் அடித்து, பொது இடங்களில் தகாத வார்த்தையால் திட்டியதாக வழக்கு பதிந்து, தலித் இளைஞர்கள் மூவரிடமும் தலா ரூ ஆயிரம் என மூவாயிரம் லஞ்சம் பெற்று லால்குடி காவல் நிலைய சிறப்பு உதவிஆய்வாளர் மணி மூவரையும் காவல்நிலையத்திலிருந்து விடுவித்தார்.
இந்த விவகாரம் உயரதிகாரிகளுக்கு தெரிய வரவும், தற்போது சமயபுரம் தனிப்பிரிவு காவலர் பணியிலிருந்து விடுவித்து, லால்குடி அருகே கல்லக்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக விக்னேஷை பணி அமர்த்த உள்ளனர். சமயபுரம் காவல் நிலையத்திற்கு மட்டும் விக்னேஷ் உள்ளிட்ட இரண்டு தனிப்பிரிவு காவலர்கள் நியமிப்பது எந்த வகையில் நியாயம். தனிப்பிரிவு காவலர் பணியில் சேர குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாக பணியாற்ற வேண்டும் என்பது குறித்து தற்போதைய திருச்சி சரக டிஐஜி சரவண குமார் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவையையும் மீறி காவலர் விக்னேஷை தனிப்பிரிவு காவலராக பணியாற்ற ஊக்குவிக்கும் அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக சமயபுரம் பகுதியிலேயே பணியாற்றும் இவரை பணிமாறுதல் செய்யாததன் மர்மம் தான் என்ன எனப் புரியவில்லை தனிப்பிரிவு காவலர் விக்னேஷைமீறி காவல் ஆய்வாளரோ, உதவி ஆய்வாளரோ செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறு என்றால் தனிக்காட்டு ராஜா போல செயல்படும் இவருக்கு நேச கரம் நீட்டும் அதிகாரிகள் யாரோ ?இவரைக்குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் தான் சமயபுரம் காவல் எல்லைப் பகுதியில் தலைவிரித்து ஆடும் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments