திருச்சி மாநகரின் மத்திய பகுதியான தில்லைநகர் 10வது கிராஸ் பிரதான சாலையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சரவணன் வீட்டின் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி இரவு நடைபெற்று உள்ளது.
திருச்சி தில்லைநகர் பகுதி எப்பொழுதும் பொதுமக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் தொடர்ந்து இருக்கும் பகுதி. திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமரா செயல்படாததால் வங்கி ஏடிஎம்ல் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கஞ்சா போதையில் வந்த இரு சிறுவர்களில் ஒருவன் உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் ஆனால் ஏடிஎம் ஐ உடைக்க முடியாததால் திரும்பி சென்றதாகவும் தெரிய வருகிறது. திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுக்குள் கொண்டு வர கஞ்சா விற்பனையை முழுவதும் தடை செய்தால் மட்டுமே முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments