Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் ஆடி 18 கொண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தொட்டியம் வட்டம் : – 1. உன்னியூர் 2. பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி  3. ஸ்ரீராமசமுத்திரம் 4. சீலைப்பிள்ளையார் புத்தூர் 5. காடுவெட்டி 6. நத்தம் 7. எம்.புத்தூர் பாளையம் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு) 8. அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்) 9. சீனிவாசநல்லூர் (மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர், சத்திரம் 10. மணமேடு 
11. முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை)
 
முசிறி வட்டம் :- 1. முசிறி மேற்கு காவேரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம்

ஸ்ரீரங்கம் வட்டம் :- 1. பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை) 2. முக்கொம்பு, 3. கம்பரசம்பேட்டை (தடுப்பணை) 4. முருங்கப்பேட்டை 5. முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, 6. பளுர் படித்துறை 7. அல்லூர் மேலத்தெரு படித்துறை 8. திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை 9. அந்தநல்லூர் படித்துறை 10. திருப்பராய்துறை – துலாஸ்தானம், 11. மேலூர் அய்யனார் படித்துறை 12. கீதாபுரம் படித்துறை 13. அம்மா மண்டபம் படித்துறை, 14. கருடமண்டபம் படித்துறை 15. பஞ்சக்கரை படித்துறை, 16. பனையபுரம் படித்துறை, 17. உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை, 18. கிளிக்கூடு படித்துறை

மண்ணச்சநல்லூர் வட்டம்:- 1. கரியமாணிக்கம் மேற்கு கிராமம் – வாத்தலை, 2. கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் – சிறுகாம்பூர், 3. திருவாசி கிராமம் – துடையூர் களிங்காயிகோவில், 4. மாதவ பெருமாள் கோவில் கிராமம் – நொச்சியம் மான்பிடி மங்களம், 5. பிச்சாண்டார் கோவில் கிராமம் – அய்யன் வாய்க்கால் 

திருவெறும்பூர் வட்டம் :- 1. வேங்கூர் பூச படித்துறை, 2. பனையக்குறிச்சி படித்துறை, 3. கீழ முல்லக்குடி படித்துறை 4. ஒட்டக்குடி படித்துறை

இலால்குடி வட்டம் :- 1. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் – அப்பாத்துரை கிராமம், 2. கொள்ளிடம் ஆறு – கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி

மாநகரப்பகுதி :- 1. அம்மா மண்டபம், 2. கருடா மண்டபம், 3. கீதாபுரம், 4. சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை – 2, 5. காந்தி படித்துறை, 6. ஓடத்துறை, 7. அய்யாளம்மன் படித்துறை, 8. தில்லைநாயகம் படித்துறை. மேலும் ஆடி -18 மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, மீட்புப்பணிகள்துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம்இன்றி பொதுமக்கள் ஆடி-18 விழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *