திருச்சி லால்குடி தாலுகா துறையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன்கள் பிரியதர்ஷன் (14), பிரணவ் (10). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரசன்னா (10). இதில் பிரணவ், பிரசன்னா ஆகியோர் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற பிராணவ் மற்றும் பிரசன்னாவை பள்ளி முடிந்ததும் வி.துறையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புராணக் சகோதர் பிரியதர்ஷனும் ஆட்டோ டிரைவருடன் தம்பி அழைத்துச்செல்ல வந்துள்ளார்.
அப்போது திருச்சி அடுத்த பனமங்கலம் அருகே சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ வந்தபோது எதிரே அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஆட்டோ மீது மோதியதில் இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற பிராணவ், பிரசன்னா, பிரியதர்ஷன் மற்றும் ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கார் டிரைவர் அரியலூர் மாவட்டம் திருமானூர் தாலுகா ஜி.கே.எம்.நகரை சேர்ந்த சையது அலி என்பவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments