திருச்சி மாநகர காவல்துறை புதிய முயற்சியை தொடங்கியுள்ளது .ஐந்து இடங்களில் போக்குவரத்து மீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்க கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி ஒரு புதுவித முயற்சியை தொடங்கியுள்ளனர் .
போக்குவரத்து விதிகளை மீறி பிடிபட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மீறல் மற்றும் அதற்கான ஆதாரங்களை பற்றியே அனுப்பப்படும் என்பதை குறிக்கும் குறுஞ்செய்தி கிடைக்கும்.
கலெக்டர் அலுவலக சாலை, வில்லியம் சாலை சந்திப்பு, தலைமை தபால் நிலையச் சந்திப்பில், திருவானைக்காவல் சந்திப்பில் மற்றும் மெயின்கார்டு வாயிலில் இப்படி நகரின் ஐந்து இடங்களில் தானியங்கி என் தட்டு ரீடர் (ANPR)automatic number plate reader கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறும் வாகனங்களை ANPR கேமராக்கள் கண்டுபிடித்து நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் மோட்டார் வாகன சட்டம் 1988 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் வாகனத்தின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி கிடைக்கும் இதன்மூலம் நாங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் வழக்குகளில் ANPR கேமராக்களை பயன்படுத்தி பதிவு செய்தலில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மட்டும் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது. மற்ற விதிமீறல் குற்றங்களுக்கு அபராதம் விதிக்க விரைவில் மென்பொருள் மேம்படுத்துவோம் என்று காவல் அதிகாரி கூறினார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ANPR கேமராக்கள் சோதனை ஓட்டம் மேம்பாட்டுக்காக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.மக்களின் நலன் கருதி காவல்துறையின் பல்வேறு புது முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது மக்கள் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments