திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேபுரம் கோட்டம், மண்டல் எண்.5,வார்டு எண் – 28 ல் தென்னூர், காம்ராஜ் நகர் பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அப்பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் சிரமமப்படும் அவல நிலை உள்ளது. இதனால் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையிலும் நிரம்பி வழிந்தோடும் நிலையிலும் இருக்கிறது.
எனவே பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீரை சிரமமின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments