Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

பேருந்து வசதியின்றி அவதி – சிகிச்சை பெற 10 கி.மீ தூரம் நடந்து செல்லும் கர்ப்பிணி பெண்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பச்சைமலை. இது வன்னாடு, கோம்பை, தென்பர நாடு என்று மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கியது. இதில் கோம்பை ஊராட்சியில் எருமைப்பட்டி, குண்டூர், ஏரிக்காடு மருதை ஆகிய பகுதிகளில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்-பெண் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இங்கு உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளிக்கூடம் மாணவ – மாணவிகள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இங்கு வாழும் மக்கள் தங்கள் தேவைகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். மேலும் இங்கு முக்கிய தொழிலானது விவசாயம் ஆகும். தங்கள் வயல்களில் விளையும் வருட பயிர்களானா மா, பலா, முந்திரி, மிளகு ஆகிய விளைப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து செம்புளிச்சாம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்று பின் அங்கிருந்து துறையூர் நகர பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களுக்கு 10 கிலோமீட்டர் தூரம் சுமை சுமப்பது மிகவும் கடினமாக இருப்பதால் தங்கள் வயல்களில் விளையும் பொருள்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டுவிடுவதாகவும் கூறினார். இதனால் தங்களுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். தாங்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு நகரத்திற்கு செல்ல வேண்டு மென்றால் விடியற்காலை 4 மணிக்கு நடந்து சென்று 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்புலிச்சம்பட்டி என்ற கிராமத்தை அடைந்து அங்கு காலை 6:00 மணிக்கு புறப்படும் நகரப் பேருந்தில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் மாலை 5:00 மணி ஆகும் என்றும்

மேலும் அங்கிருந்து நடந்து தங்கள் வீட்டை அடைவதற்கு இரவு 7:00 மணி ஆகும் என்றும் பெண்கள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்தில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றால் அவர்களை தூழி கட்டி 10 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கோ இல்லை ரத்த சோகை ஏற்படாமல் இருக்க மலை அடிவாரத்தில் உள்ள செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடர்ந்து ஆறு நாட்கள் செல்ல வேண்டும் என்றும் செல்வதற்கு 10 கிலோமீட்டர் தூரம் கர்ப்பிணி பெண்கள் நடந்தே செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளனர்.

இருசக்கர வாகனத்திலியோ அல்லது வேறு ஏதாவது வாகனத்தில் சென்றால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் அளவிற்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் கூறுகின்றனர். இங்கு உள்ள பொதுமக்கள் தமிழக அரசு உடனடியாக தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி மீண்டும் செய்து தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *