Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஆவின் கிப்ட் பேக் – தீபாவளியை முன்னிட்டு திருச்சி ஆவின் நிறுவனத்தின் இனிப்புகள் தயார்!

தீபாவளி பண்டிகை என்றாலே சட்டென நினைவுக்கு வருவது இனிப்புகள் தான். அந்த வகையில் திருச்சி ஆவின் நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் எந்தெந்த சிறப்பு இனிப்புகள் விற்பனைக்கு வருகின்றது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கும். அந்த அளவிற்கு ஆவின் நிறுவனத்தில் சுத்தமாகவும் சுவையாகவும் சுகாதாரமாகவும் இன்றளவும் வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் , ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 வகையான சிறப்பு இனிப்பு வகைகள் மற்றும் 3 வகையான ” காம்போ பேக் ” குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆவினில் கடந்த ஆண்டு போல இனிப்பு வகைகள் இந்த ஆண்டும் விற்பனை செய்யப்படவுள்ளது . இந்த ஆண்டுக்கான சிறப்பு இனிப்பு வகைகள் திருச்சி ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தவுள்ளது . அதன்படி , திபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி ஆவினில் இருந்து டேட்ஸ் ஸ்வீட்ஸ், கோவா – மைசூர்பா முந்திரி கேக் ‘ , டேட்ஸ் கேக், தேங்காய் கேக் ஸ்பெசல் முந்திரி அல்வா ஆகியவை சிறப்பு இனிப்புகளாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இது தவிர உறவினர்கள் , நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கும் வகையில் ரூ .320 முதல் ரூ .750 / – வரை இனிப்புகள் மற்றும் நெய் இனிப்புகள் அடங்கிய 3 வகையான காம்போ பேக் விற்பனைக்கு தயாராக உள்ளது . ரூபாய் 325 க்கான காம்போ பேக்கில் டேட்ஸ், கோவா -250 கிராம் , மைசூர்பா 250 கிராம் , நெய் 200 – மி.லி ஆகிய பொருட்களும் , ரூபாய் 465 க்கான காம்போ பேக்கில் பேரிச்சை ( டேட்ஸ் ) கோவா 250 – கிராம் , மைசூர்பா 250 – கிராம் , நெய் 500 – மி.லி ஆகிய பொருட்களும் , ரூபாய் 750 க்கான காம்போ பேக்கில் பேரிச்சை கோவா 250 கிராம் , பாதாம் மிக்ஸ் 200 கிராம் , பால்கேக் 250 கிராம் , பேரிச்சைபால் கேக் 250 கிராம் , தேங்காய் பால் கேக் 250 கிராம் , முந்திரி அல்வா 250 கிராம் , நெய் 200 மி.லி. ஆகிய பொருட்கள் அடங்கி காம்போ பேக் விற்பனை செய்யப்படவுள்ளது .

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 5 கோடி ரூபாயை விற்பனை இலக்கை திருச்சி ஆவின் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது . இதில் இதுவரையில் 40 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளது.

Advertisement

மேலும் சிறப்பு ஆர்டர்களுக்கு 9942357209 9894023466 , 9994314559 95859775281 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார் .

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *