கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காக்கும் பொருட்டு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை தடுப்பூசி செலுத்துவதற்கு தினந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் தாரணி என்பவர் அப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருவது மட்டுமின்றி வீடு வீடாக சென்றும் விடுபட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார். அதன்படி அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 3 லட்சத்து 2 ஆயிரத்து 75 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார். அவரது இந்த சேவையை பாராட்டி மத்திய சுகாதாரத்துறை சார்பில் நாட்டிலேயே அதிக தடுப்பூசி செலுத்துவதற்கான விருது வழங்கப்படுகிறது.
இதற்கான விழா மகளிர் தினத்தன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு செவிலியர் தாரணி செல்ல முடியாததால் சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து வரும் வாரங்களில் அந்த விருதினை செவிலியர் தாரணியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments