Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தேசியக் கல்லூரியில் விளையாட்டு துறை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!!

Advertisement

திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

அதன் தொடர்ச்சியாக இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நேவி கமாண்டர் அனுப் தாமஸ், இன்டியன் சயின்ஸ் மானிட்டர் பேராசிரியர் டி.கே.ராஜன், அழகப்பா பல்லைக்கழக பேராசிரியர் மணியழகு, பாரதிதாசன் பல்லைக்கழக பேராசிரியர் காளிதாஸ், மருத்துவ விஞ்ஞானி தர்மேஷ், ஸ்ரீதரன் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில், அண்மையில் தேசிய அளவில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த தனலட்சுமிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விளையாட்டு துறைத் தலைவரும், துணை முதல்வருமான பிரசன்ன பாலாஜி செய்திருந்ததார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *