உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்திய ஐந்தாம் ஆண்டு மெடிக்கல் எக்சல்லேன்ஸ் அவார்டு 2021 என்ற விருது வழங்கும் விழா நேற்று (17.7.2021) சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை புரிந்த பல்வேறு மருத்துவர்களுக்கு விருதை வழங்கினார்கள்.
இதில் திருச்சியை சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அ.முகமது ஹக்கீம் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மருத்துவ சேவை விருது வழங்கப்பட்டது. இவர் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுமட்டுமின்றி திருச்சி மாநகர கொரோனா தடுப்பூசி மேற்பார்வையாளராக இருந்து தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது போன்ற சமூக பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவ சேவை விருது மருத்துவர் முகமது ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments