Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமூக சேவைகளை பாராட்டி ரோட்டரி மேஜர் டோனர் கே.சீனிவாசனுக்கு விருது

திருச்சி ஸ்ரீரங்கம் வியாசராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் ரொட்டோரியன் கே.சீனிவாசன். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் ஏ.கே. எஸ் புரமோஷன் சேர்மேனாக இருக்கும். அடுத்த ஆண்டு மீடியாபப்ளிசிட்டி ஆபீஸராக பதவி ஏற்க உள்ளார். இவர்  கடந்த 15 ஆண்டு காலமாக தனது தன்னல மற்ற சேவையில் தன்ளை சார்ந்தவர்களை உயர்த்தி, எளிய மக்கள் நிமிர்வதற்கு பல உதவிகள் செய்து வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற உயரியகொள்கையை கோட்பாடாக கொண்டு 8 வருவாய் மாவட்டங்களில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பல நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ரோட்டரி சங்கங்களுக்கு பல்வேறு வகையான பொருட்களை இலவசமாக வழங்கி கொண்டிருப்பவர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுக்கு பல்லாயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல பள்ளிகளுக்கு கை கழுவும் இயந்திரம். நல்ல குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், விளையாட்டுப் பொரு ள்கள், கழிவு பொருட்களை அகற்றும் இன்ஸிகிரேட்டர் போன்ற உதவிகளை செய்து உள்ளார். இந்த நிலையில் அவரது சேவைகளை பாராட்டி திருச்சி ரோட்டரி பட்டர்பிளைஸ் சார்பில் ரோட்டரி மாவட்ட 3000, கல்வியாளர் சங்கமம், அன்பில் அறக்கட்டளை இணைந்து நடத்திய தனித்திரு நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. 

திருச்சி காட்டூர் மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ரோடேரியன் கே. ஸ்ரீனிவாசனுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி, முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார். ஜோசப்கண் மருத்துவமனை இயக்குனர்.”பிரதீபா மான்ஃபோர்ட் பள்ளி முதல்வர் ராபர்ட் லூர்துசாமி மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர் அவரது சமூக சிந்தனையை அளப்பரிய சேவையை பலரும் பாராட்டு  வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *