திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் உள்ள அரசு அலுவலகங்களில் தினம் தினம் திருக்குறள் எழுதுவதற்காக போர்டு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறள் மற்றும் கலைச்சொல்லினை பொதுமக்கள் காணும் வண்ணம் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆணையின்படி
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் ம. பிரதீப் குமார், அறிவுரைப்படி காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் திருக்குறள், பொருள் மற்றும் கலைச்சொல் ஆகியவற்றை பலகையில் எழுதி காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கி வைத்தார்.
காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு பொருளுடன் கூடிய ஒரு திருக்குறள் மற்றும் கலைச்சொல்லினை பொதுமக்கள் காணும் வண்ணம் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
385
12 May, 2023










Comments