தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் சார்பில் Go Electric Save the planet மின் வாகனம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் (09.12.2021) தேதி இன்று முதல் (11.12.2021)ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் துவக்க நாளான இன்று மேற்பார்வை பொறியாளர் மன்னார்புரம் அலுவலகத்தில் செயற்பொறியாளர் மற்றும் ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மின் வாகனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
மின் வாகனம் குறித்த பேனர் உள்ள வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நகரியம் சார்ந்த பகுதிகளில் இன்று முதல் 14ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments