திருச்சியில் தமிழ் குரல் அறக்கட்டளையின் மூத்த உறுப்பினரும் சமூக ஆர்வலரும்,சித்த வைத்தியருமான D.S.P என்கிற சீனிவாசபிரசாத், திருச்சி பாண்டிச்சேரி வரையிலான 2023 ஆண்டு நடமாடும் உயிர்காக்கும் சேவை வாகனம் மூலம் சாலைப் பாதுகாப்பு, சாலைப் பயண பாதுகாப்பு, வாகன தீ விபத்து தடுப்பு (27.11.2023) (30.11.2023) வரை துவக்க நிகழ்ச்சி
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள காந்தி மார்கெட் காவல் நிலையம் காவல்துறை காவல் துணை ஆணையர் அலுலவகம் முன்பிருந்து துவக்கி வைக்கப்பட்டது. இப்பயணத்தை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் வி.அன்பு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஜோசப்நிக்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரியிலிருந்து திருச்சிக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பயணத்தை புதுச்சேரி முதலமைச்சர் நா.ரெங்கசாமி அலுவலகத்திலிருந்து தமிழ்குரல் அறக்கட்டளையின் நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் அதிகாரிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments