Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

100 %சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தும் விதமாகவும் நேர்மையாக வாக்கு செலுத்த விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை

திருச்சி மாவட்டம் நகர பகுதிகளான சத்திரம்பேருந்துநிலையம் E.B.ரோடு, கிருஷ்ணாபுரம், எடமலைபட்டிபுதூர், புத்தூர் மற்றும் புறநகர் பகுதிகளான சோமரசன்பேட்டை,பொன்மலை நத்தமாடிபட்டி, மாவடிகுளம், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில்  மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 30-03-2021 முதல் 02-04-2021 வரை நடைபெற்றது தமிழகத்தில் வருகின்ற 2021 ஏப்ரல் 6 ம்தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 100 %சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தும் விதமாகவும் நேர்மையாக வாக்கு செலுத்தவும் வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் பாதுகாப்பாக இருக்க முககவசம் அணிவதின் முக்கியதுவத்தை வலியுறுத்தும் விதமாகவும் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் துண்டறிக்கை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தலைமை தாங்கினார், வழக்கறிஞர் T.கார்த்திகா B.B.A.L.L.B அவர்கள் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில் நண்பர்கள் சிலம்பக்கூடத்தின் ஆசான் G.N சண்மூகசுந்தரம் செயலர் B.C.யுவராஜ் புனித வளனார் கல்லூரி (NSS)நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ரெனிஷ்,முரளிகிருஷ்ணன், நிஷாந்த்,சதீஷ்குமார், பாலமுருகன் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம், தினசேவை அறக்கட்டளை நிர்வாகி S.பகவதி தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியராக்கினி சமூக ஆர்வலர் பக்கிரிசாமி  மாற்றம் அமைப்பை சேர்ந்த தினேஷ்குமார், மணிவேல், ரெங்கராஜ்,தினகரன், ஜோஸ்வா காயத்ரி,கார்த்தி, செல்வகுமார், ஜெயந்தி, ஜீவிகா நிஷாந்த்,வித்யாசாகர்,சந்தோஷ்,தர்ஷிதா, கீர்த்திவர்மன்,யுவராஜ், கீர்த்திஹரன்,   யோகம்பாள், சர்வேஸ்வரா, ரசிகா
உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசங்களை வழங்கினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *