இந்திய தர நிர்ணய குழு சார்பில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பொருட்களின் தரம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள அம்மன் ஸ்டீல் நிறுவனத்தில் முறுக்கு கம்பிகளின் தரம்
குறித்து விளக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தர நிர்ணய குழுவின் மதுரை கிளை மூத்த இயக்குனர் தயானந்த் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து இந்திய தர நிர்ணய குழுவின் தலைமை நிலைய மூத்த இயக்குனர் (CED) நிஷிகாந்த் சிங், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு, கான்கிரீட்
கட்டமைப்பில் இரும்பு கம்பிகளின் தரநிலை குறித்து விளக்கி பேசினார். முன்னதாக இந்திய தர நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் தற்போதைய புதுமைகள் குறித்துமதுரை கிளை இணை இயக்குனர் ஹேமலதா பணிக்கர் விளக்கினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஸ்ரீரங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments