திருச்சி மாநகர காவல் அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான காவல் துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது பின்னர்பெண்களுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் லொகேஷன் ஹெட் நாராயணன், இணை இயக்குனர் ஆண்டனி ஈபன், கன்டோன்மென்ட் பகுதி காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் எஸ்பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் என் சேகரன் அமர்வு நீதிமன்ற காவல் நிலையம், அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எஸ்ஐ மோகன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது செல்போன்களில் காவல் நிலையம் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்துவது குறித்த விளக்கங்களை தெரிந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments