திருச்சி மாநகரம் கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் விஜித்தாள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10 9 8 குறித்தும் ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவா கல்வியின் அவசியம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு எழுதுகோல் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments