திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெல் கம்யூனிட்டி ஹாலில் நடந்தது. சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமை வைத்தார். பெல் தலைமை மருத்துவர் மஞ்சுளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பெல் மருத்துவர் ஜெனிதா குழந்தைகள் பேசுவது குறைந்து போய் உள்ளது காரணம் பெற்றோர்கள் அவர்களிடம் செல்போனை அளவில் கொடுப்பதால் தான் செல்போன் பார்ப்பதை குழந்தைகள் தவிர்த்தால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையும் என்றும் கூறினார்,
குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பான செல்போன் உபயோகம் குறித்த விழிப்புணர்வு குறித்து டாக்டர் ஜெயந்தியும்,சிகிச்சை குறித்து பிசியோதெரபி அலுவலர் பிரபாகரன் எடுத்துக் கூறினார்கள். இந்த விழாவில்பெல் ஊரகப்பகுதியைச் சேர்ந்த ஊழியர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
388
20 April, 2023










Comments