திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் உணவு பொருள்களில் உள்ள கலப்படத்தை எளிதில் கண்டறியும் பரிசோதனை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தலைமை நிர்வாகி ஆரிய சக்தி ஏற்பாடு செய்து இருந்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு, கூறுகையில் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு பொருள்களை உட்கொள்ளுதல், நெகிழியினால் ஏற்படும் தீங்கு அவற்றுக்கான மாற்று முறை, உணவு பொருள்களின் கலப்படத்தை எளிதில் கண்டறியும் முறை பரிசோதனை பற்றிய விளக்கவுரை, உணவு பொட்டலத்தில் கவனிக்க வேண்டிய பொருள் விவரசீட்டு விவரங்கள் மற்றும் செயற்கை நிறமிகளால் ஏற்படும் தீங்கினை எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் E.வசந்தன், L.ஸ்டாலின்பிரபு மற்றும் மற்றும் N.பாண்டி ஆகியோர் இக்கூட்டத்திற்கான பணியினை செய்து இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments