பொதுமக்கள் 100% ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் இருந்து மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சட்ட ஒழுங்கு துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் வேதரத்தினம், உதவி ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர் முருகேசன், விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு சென்று விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.இந்த பேரணி தலைமை தபால் நிலையத்தில் துவங்கி கோர்ட் எம்ஜிஆர் சிலை, புத்தூர் நால்ரோடு, தென்னூர், தில்லைநகர், கரூர், பைபாஸ் ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக அண்ணா சிலை சென்றடைந்தது.
இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும், விபத்துக்கள் ஏற்படும் பொழுது தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
Advertisement
Comments