திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேறியில் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் திருச்சி நேரு யுவகேந்திரா இணைந்து “பசுமை கிராமம் தூய்மை கிராமம்” என்கிற தலைப்பில் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 55பேர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீரும் முகக் கவசமும் அளிக்கப்பட்டது.
மேலும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இளைஞர் மன்ற தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன், சிறு தொழில் முனைவோர் கலைவாணன், சமூக ஆர்வலர் யோ பயிற்சியில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயிற்சி வழங்கினர் .
பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கையேடுகள் வழங்கப்பட்டது .
100%வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு துண்டுப்பிரசுரங்கள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments