சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு திரையரங்கில் ரீலிஸ் ஆனது. தற்போது மீண்டும் அந்த திரைப்படும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
அந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று பாபா படத்தை கொண்டாடும் வகையில் திருச்சியில் ரஜினி ரசிகர்கள் பட பெட்டி வடிவிலான பெட்டியை எடுத்து வந்து மேளதாளம் முழங்க, ஆடி பாடி உற்சாகமாக திரையரங்கிற்கு ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து அங்கு படத்தை வரவேற்கும் வகையில் வெடி வெடித்து கொண்டாடினர். 20 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்தாலும், மீண்டும் முதல் முறை வெளியாவது போன்று உணர்வதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments