தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு நாளை (29.12.2022) அன்று வருகைதர உள்ளார்கள். காலை 9:30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அண்ணா விளையாட்டரங்கம் வருகைபுரிந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியும், மணிமேகலை விருதுகள்,
மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கியும், முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகைள வழங்க உள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு-2ல் அமைந்துள்ள ஆலை விரிவாக்கத்தின் முதற்கட்டமாக உலகத்தரம் வாய்ந்த வன்மரகூழ் ஆலையை திறந்து வைத்தும், மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், சன்னாசிப்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் ஒரு கோடியே 1-ஆவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கி, பல்வேறு மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, சன்னாசிப்பட்டியிலிருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு சென்று சென்னை செல்லவுள்ளார். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் சென்னை செல்லும் வரை
மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது. எனவே (29.12.2022) அன்று தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments