Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகிய புல்வெளி அமைப்பு

திருச்சி புதிய மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தின் முன்புறம் காலியாக இருந்த இடத்தில், முட்புதர்கள் மண்டி கிடந்தது. கடந்த 2011ல் கலெக்டராக பொறுப்பேற்ற ஜெயஸ்ரீ முரளிதரன்   இவ்வளவு இடத்தைஏன் வீணாக்க வேண்டும்
என்று எண்ணிய அவர்,அப்பகுதிகளில்
மரக்கன்றுகள் 
நட்டு பராமரிக்க உத்தரவிட்டார். அதன்படி நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன தற்போது அந்த மரக்கன்று நன்கு வளர்ந்து அழகு  சோலைவனமாக காட்சியளிக்கிறது.

இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் அந்த மரங்களில் இளைப்பாறுகின்றன ஆனால் மர இலைகளாலும் களைச்செடிகளாலும் சூழப்பட்டு காட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி வந்தன இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உத்தரவிட்டார் அதன்படி பொதுப்பணித்துறை கட்டிட பராமரிப்பு சார்பில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து செடி கொடிகள் காய்ந்த இலைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது அந்த இடம் முழுவதும் புல்வெளி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இப்பணிகள் முடிந்த பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதி பார்க்கவே ரம்யமாக காட்சியளிக்கும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *