திருச்சியில் இருந்து பல்வேறு மாநிலம், மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகவும் ரயில்கள் செல்கின்றன. இதனால் ரயில் பயணிகள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இது பயணிகளுடைய நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்பொழுது மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் நேரம் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments