திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த எம்.புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த தொப்பலாம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் எட்டு திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொடுக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் இன்று கட்டிடத்திற்கு எம்.புதுப்பட்டி தலைவர் சரவணன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்வில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பரணிதரன், மேற்பார்வையாளர் நடராஜன், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சசிகுமார்,
தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் , பயனாளிகளான திருநங்கைகள் மேரி அம்மா, ராசாத்தி, அர்ச்சனா, அகல்யா, சிம்ரன் உட்பட பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments