திருச்சியில் பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், எகிப்து வெங்காயம் 40 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்கபடுவதாக வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் நாளொன்றுக்கு பெரிய வெங்காயம் ( மகாராஷ்டிரா கர்நாடகா )300 டன்னும் சின்ன வெங்காயம் (பெரம்பலூர், துறையூர், நாமக்கல், தாராபுரம் ) 100 டன் வருகிறது.
Advertisement
தற்போது மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் ஆகவும் சில்லரை விற்பனையில் 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் தற்போது 60 ரூபாய்க்கும் ,25 டன் வந்துள்ள எகிப்து வெங்காயம் 40 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது .சில்லரை விற்பனையில் 20 ரூபாய் கூடுதலாக விற்கபடுகிறது.
Advertisement
Advertisement
Comments