திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதம் முதல் முறையாக நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில், காணிக்கையாக ரூ. 92 லட்சத்து 93 ஆயிரத்து 585 ரொக்கமும், 1 கிலோ 296 கிராம் தங்கமும், 2 கிலோ 579 கிராம் வெள்ளியும், 114 வெளி நாட்டு கரன்சி மற்றும் 1,288 வெளி நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கைஎண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments