தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருச்சி மாநகராட்சி அழகுபடுத்தும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக குடியிருப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள குப்பைகளை மாநகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் நேரடியாக சென்று குப்பைகளை பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்புகளில் கொடுக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது குடியிருப்புவாசிகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுத்தாலும், அதனை மாநகராட்சி ஊழியர்கள் ஒன்றாக கலந்து வண்டியில் ஏற்றி செல்கின்றனர். மாநகராட்சி மூலம் பெறப்படும் குப்பைகள் நுண்ணுயிர் செயலாக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் வாங்கும் போது மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் அப்படி பெறப்படும் குப்பைகளை ஒன்றாக கலந்து வீணாகிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் நல்ல திட்டங்கள் வீணாகிப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments