பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் உணவு வழங்கும் திட்டத்தை பேராயர் சந்திரசேகரன் தொடங்கி வைத்துள்ளார். பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தேவை உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கும் திட்டம் குறித்த கூட்டம் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் திருச்சி தஞ்சை மண்டல பேராயர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருச்சி மறைமாவட்டத்தில் 15 தேவாலயங்கள் பேராயர் இல்ல வளாகம் மூலமாக தேவையுள்ள 1,500 பேருக்கு உணவு குடிநீர் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மறை மண்டலத்திலுள்ள நாகப்பட்டினம் முதல் வால்பாறை பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த தொலைபேசி மூலம் ஆலோசனை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து உணவு தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இன்றைய தினம் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
திருச்சி தஞ்சை பெரும் மண்டலத்தில் பேராயர் சந்திரசேகர் பிஷப் வழிகாட்டுதலின் படி தாராபுரம் தூய மாதா சேகரத்தின் சார்பில் இன்று ஆதரவற்ற ஏழை மக்களுக்கு முட்டையுடன் உணவு பொட்டலங்கள் 500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments