திருச்சி வடக்கு தாரநல்லூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம் (43) விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் திருச்சி இபி சாலையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். காமராஜ் நகர் சூரன்சேரியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (47). இவர் பாரதிய ஜனதா கட்சியில் எஸ்.டி.பிரிவின் திருச்சி மாவட்ட தலைவராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று இபி சாலையில் வேதாத்திரி நகர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இழிவுபடுத்தும் வகையில் பாஸ்கர் பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு கோபமடைந்த சதாசிவம் எங்கள் கட்சித் தலைவர் எப்படி இழிவாக பேசலாம் என கேட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர் அங்கிருந்த கல்லை எடுத்து சதாசிவத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சதாசிவம் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் பாஸ்கர் மீது கொலைமுயற்சி பிரிவின் கீழ் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments