நேற்று திருச்சி ராணுவ மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் புகைப்பட கலைஞருரும், செய்தியாளரும் பாஜகவினரால் தாக்கப்பட்டனர்.
புகைப்படக் கலைஞர் சுந்தர் தலை,மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கேகே நகர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 10 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகளை வைத்து கே.கே நகர் போலீசார் செய்தியாளர்களை தாக்கிய பாஜகவினரை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments