கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவானைக்கோயில், அம்மா மண்டபம் காவிரி மேம்பாலம் என பல்வேறு இடங்களில் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு உணவினை மாநகர பாஜக சார்பில் வழங்கியுள்ளனர்.
ஸ்ரீ செண்பக மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த பிரசாரக் சுயம்சேவகர் ஸ்ரீ கணேசன் அவர்களின் ஆசியுடன்
திருச்சிராப்பள்ளி மாநகர பிஜேபி மாவட்ட செயலாளர் கணேஷ் மற்றும் பஞ்சாபி கண்ணன்( அரசு தொடர்பு மாவட்ட செயலாளர்) ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் ராஜா ஆகியோர் நேரடியாக ஏழை எளிய மக்களுக்கு உணவினை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தனி மனித இடைவெளியை பின்பற்றி இரவு நேரத்தில் சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு உணவு அளித்து உதவியுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments