திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன் இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா என்பவரை அனுகியுள்ளார்.
ரேகா குஜராத் கம்பெனியில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக உத்தரவாதம் கூறி தொழிலதிபர் கண்ணனிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ரூ 2. லட்சத்து 20ஆயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி டைல்ஸ் வாங்கி தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து தொழிலதிபர் கண்ணன் கேட்கவே ரேகா வாங்கிய பணத்திற்கு செக் கொடுத்துள்ளார். கண்ணன் செக்கை வங்கியில் டெபாசிட் செய்யவே அங்கு பணமின்றி செக் ரிட்டன் ஆகிவிட்டது.
இது குறித்து கண்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் புகார் செய்துள்ளார் சந்திரமோகன் இது பற்றி ரேகாவை நேரில் அழைத்து விசாரித்துள்ளார் அப்பொழுது ரேகா விரைவில் பணத்தை திருப்பி தருவதாக ரேகா எழுதிக் கொடுத்து சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பணத்தைக் கேட்டு ரேகாவிடம் கண்ணன் போராடி வந்த நிலையில் நேற்று திருச்சி எஸ்பிவருண் குமாரிடமும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் அவர்களிடமும் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் ரேகாவை அழைத்து விசாரணை செய்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரேகாவை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் கண்ணன் திருவெறும்பூர் வடக்கு மண்டல் பாஜக தலைவர் செந்தில்குமாரின் உறவினர் ஆவார். பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments