திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் தேர்த்திருவிழாவின் 13 ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து உள்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு தெப்ப உற்சவம் நடைப்பெற்றது.
முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட விழா செவ்வாய்க்கிழமை பக்தரகளின்றி கோயில் 2ம் உள் பிரகாரத்தில் நடைப்பெற்றது. வழக்கமாக சமயபுரம் நால்ரோட்டில் கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
கொரோனா தொற்று காரணமாக தெப்ப உற்சவம் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் சுற்றிவந்து ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தது.
இவ்விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோயில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments