திருச்சி திண்டுக்கல் சாலையில், உள்ள ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது.
மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொன்னி உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகம் பேருந்து வகுப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
இப்பள்ளியில் 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு பயன்படுத்தக்கூடிய பேருந்து பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது பள்ளியின் ஈமெயில் ஐடிக்கு வந்துள்ளதாக முதல் கட்ட தகவலாக தெரிவிக்கின்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments