Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஏப்.23-ல் புத்தக திறனாய்வுப் போட்டி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி ஏப்.23-ல் வாசகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான புத்தகத் திறனாய்வுப் போட்டி நடை பெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…  இந்த புத்தக திறனாய்வுப் போட்டி 6 முதல் 9 வரையிலான வகுப் புகளுக்கு ஒரு பிரிவாகவும், கல்வர்கள் தாங்கள் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், பொது வாசகர்களுக்கு ஒரு பிரிவாகவும் என மூன்று பிரிவுகளாக நடை பெறவுள்ளது.

மாவட்ட மைய நூலகத்தில் ஏப்.23-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் போட்டியில் பங் கேற்க உள்ளவர்கள் ஏப்.21-ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 0431 2702242 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் நிறுவனங்களிலிருந்து அனுமதி கடிதத்துடன் பங்கேற்க வேண்டும் 

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒரு புத்தகத்தை திறனாய்வு செய்ய வேண்டும். ஒரு போட்டியாளருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். முதல் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடத்தை பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2-வது சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் புத்தகப் பிரியர் என்ற விருது வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *