திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்தில் புதிதாக 250 எம்.எம். விட்டமுள்ள ஆழ்துளை கிணறுகள் ஆறு எண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் அன்பழகன் பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு பகுதிகளில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .பெரியார் நகர் ,அய்யாளம்மன் படித்துறை, கொள்ளிடம் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குடிநீர் உந்து நிலையங்களில் குடிநீர் குறைவாக வருகிறது. எனவே, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிநடைபெற்று வருவதை விரைந்து முடிக்குமாறும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கினார்.
ஆய்வில் செயற்பொறியாளர் கே.எஸ் பாலசுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் ஸ்டாலின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments