திருவெறும்பூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவனை துவாக்குடி போலீசார் கைது செய்ததோடு மேலும் ஒருவனை தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மாரகுடியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (54). இவர் திருத்துறைப்பூண்டி பஸ் டெப்போ டிரைவர். இவர் வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு வந்துவிட்டு தஞ்சையை நோக்கி செல்லும்பொழுது துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் குணால் என்பவன் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் அமர்ந்தபடி தெற்குமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் தனது இருசக்கர வாகனத்தை இடிக்க வந்ததாக கூறி பஸ்சை விரட்டினர்.
பஸ் துவாக்குடி டோல்பிளாசா பகுதியில் செல்லும்பொழுது பஸ்ஸை வழிமறித்து கீழே கிடந்த கல்லை எடுத்து சிறுவன் டிரைவரை நோக்கி வீசி உள்ளான்.இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும்அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து கோதண்டபாணி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்
அதன் அடிப்படையில் துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிந்து ஏட்டு இப்ராஹிம் உள்ளிட்ட போலீசாருடன் தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களில் ஆய்வு செய்து துவாக்குடி தெற்கு மலையைச் சேர்ந்த பாலமுருகனின் 17வயது மகனை
கைது செய்து மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தி அவரது உத்தரவுப்படி சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்பட்டான் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குணாலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments