திருச்சி மணிகண்டம் பகவதி அம்மன் தெரு பகுதியில் வசிபவர்கள் நடராஜன் – கலா தம்பதி. இவர்களது மகன் ஆறாம் வகுப்பு படிக்கும் யுவராஜன், பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள வயல் பகுதிக்கு இன்று காலை சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மின்சார கம்பி ஸ்டே அறுந்து மின்சாரக் கம்பி தாழ்வாக தொங்கியுள்ளது. இதை கவனிக்காமல் சென்ற சிறுவன் மீது மின்சார கம்பி உரசி உள்ளது. இதில் சிறுவனுக்கு மின்சாரம் பாய்ந்து வலது புறம் தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியுடன் கருகிய நிலையில் கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது அரசு மருத்துவமனையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் தாழ்வாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்திற்கு முன்பு மின்வாரியம் இது போன்ற மின் கம்பிகளை மாற்றி உயிர் சேதத்தை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments