திருச்சி மாவட்டம் துறையூர் பெருமால் மலை அடிவாரம் கீழ் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி திருத்தேர் பெருந்திருவிழா நடைபெற்றது.வைகாசி விசாக நட்சத்திரத்தன்று பெருமாள்மலை மீதுள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரர் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமி திருத்தேர்
எழுந்தருளி, கிரிவலப்பாதையில் உலா வந்து, பக்தர்களுக்கு அருளினார். கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சவ விழாவில், வைகாசி விசாகத்தன்று பெருமாள்மலை ஸ்வாமிக்கு தேரோட்டம் நடைபெறுவது வேறு எந்த வைணவ தலத்திலும் இல்லாத சிறப்பு. தேர் திருவிழாவுக்காக கடந்த, 1ம் தேதி கொடியேற்றம் நடந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் ஸ்வாமி வீதியுலா நடந்தது.
7ம் நாளில் ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் அடிவாரத்திலுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நடந்தது. நேற்று காலை, 9. 15 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மெடிக்கல் முரளி,முன்னாள் அறங்காவலர்கள் உள்பட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலத்திலுள்ள பக்தர்கள் மற்றும் மேலகுண்ணு பட்டி, கீழ குண்ணுப்பட்டி, முத்தம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, பகளவாடி, நல்ல வண்ணி பட்டி, கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, துறையூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பத்தாம் நாளான இன்று துறையூர் வட்டம் சலவையாளர்கள் முறைப்பாடு மற்றும். தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியின்போது சாவையாளர்கள் புது மண்டபத்திலிருந்து சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து அர்ச்சகர் சந்தானம் தலைமையில் சுவாமி மற்றும் அம்பாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், திரவிய பொடி, பஞ்சாமிர்தம்,தேன் போன்ற பொருள்களின் அபிஷேகம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் பொது மண்டப தலைவர் ரமேஷ்,துனை தலைவர் தயாளன்,செயலாளர் பாலகிருஷ்ணன், துனை செயலாளர் ராஜேந்திரன், பொருளார் ராமசாமி,துணைப் பொருளாளர் சேகர்உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments