திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லடியான், அய்யனார் கோவிலில் நேற்று மாலை கோவிலின் பூசாரி சதீஷ் (35) கோவிலில் பூஜைகளை முடித்து கோவிலின் கதவுகளை சாத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய வரும் போது இரும்பு கேட்டின் பூட்டு மாட்டும் கொண்டி அறுந்து கிடந்தது உள்ளது.
பின்னர் உள்ளே இருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் உள்ள தச்சமலை வனப்பகுதியில் சில்லறை காசுகள் கிடப்பதாக வனத்துறையினர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இக்கோவிலில் இதே போன்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் பூட்டை உடைத்துஉண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments